காசியாபாத்:முராத்நகர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், 2005ஆம் ஆண்டு மலையேற்றம் சென்றபோது காணாமல் போனார், 16 ஆண்டுகளுக்கு பிறகு அவரது உடற்கூறுகள் கண்டெடுக்கப்பட்டு அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.
16 ஆண்டுகளுக்கு பிறகு எரியூட்டப்பட்ட ராணுவ வீரர் உடல் முர்தாநகரில் உள்ள ஹிசலி கிராமத்தை சேர்ந்த அம்ரிஷ் தியாகி, 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரகாண்ட் மலைப் பகுதியில் இருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார்.
16 ஆண்டுகளுக்கு பிறகு எரியூட்டப்பட்ட ராணுவ வீரர் உடல் ராணுவ வீரரான அம்ரிஷ் தியாகி மலையேற்றத்தில் சிறந்து விளங்கியவர். இமாலயம், சியாச்சின் போன்ற உயரமான மலை உச்சிகளில், பலமுறை அவர் மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளார். 2005ஆம் ஆண்டும் இதேபோல சியாச்சின் மலை உச்சியில் மூவர்ணக் கொடியை ஏற்ற தனது அணியுடன் சென்றார். ஆனால், திரும்பி வரும்போது அவரது அணியினர் எதிர்பாராத விபத்தில் சிக்கி பனிக்குள் புதைந்தனர்.
16 ஆண்டுகளுக்கு பிறகு எரியூட்டப்பட்ட ராணுவ வீரர் உடல் மீட்புக் குழுவினர் அந்த ஆண்டு மூன்று ராணுவ வீரர்களின் உடல்களை மீட்டனர். ஆனால், தியாகியின் உடல் கிடைக்கவே இல்லை. சமீபத்தில் சடோப்நாத் மலை உச்சிக்கு இந்திய ராணுவ வீரர்கள் சென்றபோது, அங்கு இவரது உடற்கூறுகள் கண்டெடுக்கப்பட்டன.
இன்று அவரது சொந்த கிராமத்துக்கு உடற்கூறுகள் கொண்டுவரப்பட்டு, அரச மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.
16 ஆண்டுகளுக்கு பிறகு எரியூட்டப்பட்ட ராணுவ வீரர் உடல் அம்ரிஷ் தியாகியின் உடற்கூறுகள் கிடைத்ததை சொன்னபோது, அவரது குடும்பத்தார் கண்கலங்கியுள்ளனர். 1962, 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போர்களில் பங்கேற்றவர் அம்ரிஷின் தந்தை. சில ஆண்டுகளுக்கு முன்புதான் அம்ரிஷின் மனைவியும் அப்பாவும் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:'பனி மூடினாலும் பயணம்'- ஸ்ரீநகர்-லே ஜோசிலா சுரங்கப்பாதை.. அடுத்த 4 ஆண்டுகளில்!