தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மார்கதர்சி சிட் ஃபண்டுக்கு எதிரான ஆந்திர அரசு நியமித்த தனியார் ஆடிட்டரின் நடவடிக்கைக்கு தடை!

மார்கதர்சி சிட் ஃபண்டை தணிக்கைக்கு உத்தரவிட ஆந்திரப் பிரதேச ஆணையர் மற்றும் முத்திரைகள் மற்றும் பதிவுத்துறைத்தலைவர் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை என்று நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மார்கதர்சி சிட் ஃபண்டுக்கு எதிராக ஆந்திர அரசு நியமித்த தனியார் ஆடிட்டரின் நடவடிக்கை தடை!
மார்கதர்சி சிட் ஃபண்டுக்கு எதிராக ஆந்திர அரசு நியமித்த தனியார் ஆடிட்டரின் நடவடிக்கை தடை!

By

Published : Apr 24, 2023, 10:52 PM IST

ஹைதராபாத்: மார்கதர்சி சிட் ஃபண்டைத் தணிக்கை செய்ய தனியார் 'ஆடிட்டரை' நியமித்ததற்காக ஆந்திரப் பிரதேச அரசைக் கடுமையாகக் கண்டித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், அந்த நியமனம் "சட்டப்படி அனுமதிக்கப்படாதது" என்பதைக் கண்டறிந்து, மார்கதர்சி சிட் ஃபண்ட்-க்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளது.

மேலும், தணிக்கைக்கு உத்தரவிட ஆந்திரப் பிரதேச ஆணையர் மற்றும் முத்திரைகள் மற்றும் பதிவுத்துறைத்தலைவர் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை என்று நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் அமர்வு ஏப்ரல் 20-அன்று தடை உத்தரவு பிறப்பித்தது.

"மனுதாரரின் விவகாரங்களில் பொது தணிக்கை நடத்துவதற்காக, சிட் ஃபண்ட் சட்டம், 1982-ன் பிரிவு 61-ன் துணைப்பிரிவு 4-ன் கீழ், இரண்டாவது பிரதிவாதியின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இரண்டாவது பிரதிவாதியின் நடவடிக்கையை முதன்மையாகக் கருதுகிறது.

மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம் அதிகார வரம்பற்றது. தடைசெய்யப்பட்ட நடவடிக்கையால் அந்நிறுவனத்தை தணிக்கை செய்ய உத்தரவிடுவதற்கு இங்கு முத்திரைகள் மற்றும் பதிவுத்துறைத்தலைவருக்கு அத்தகைய அதிகாரம் வழங்கப்படவில்லை" என்று நீதிமன்றம் தனது விரிவான தடை உத்தரவில் குறிப்பிட்டது.

சுவாரஸ்யமாக, ஆந்திரப் பிரதேச ஆணையர் மற்றும் முத்திரைகள் மற்றும் பதிவுத்துறைத்தலைவர் ஆகியோர் வெமுலபதி ஸ்ரீதர் என்னும் நபரை தனியார் சிட் ஆடிட்டராக 15.03.2023 முதல் ஓராண்டு காலத்திற்கு நியமித்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மார்கதர்சி சிட் ஃபண்டின் 37 சிட் கிளைகள் தொடர்பாக விரிவான தணிக்கையை நடத்துமாறு ஸ்ரீதரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, ஸ்ரீதரை தணிக்கை செய்ய உத்தரவிட்ட ஆந்திர அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மார்கதர்சி சிட் ஃபண்ட் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தணிக்கையாளரின் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்ட நிலையில், மார்கதர்சி சிட் ஃபண்ட் விவகாரங்களில் தனியார் தணிக்கையாளர் எவ்வாறு சொந்தமாக விசாரணை நடத்தினார் என்று தெலங்கானா நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவில், "வெமுலபதி ஸ்ரீதரை சிட் ஆடிட்டராக நியமித்து, பொது விவகாரங்களை தணிக்கை செய்ய உத்தரவிடுவதில், ஆந்திர முத்திரைகள் மற்றும் பதிவுத்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எந்தவொரு சிட் அல்லது சிட் குழுவிற்கும் குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லாமல் சட்டத்தின் கீழ் தணிக்கைக்கு உட்படுத்த முடியாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

"சிட் ஃபண்ட் நிறுவனங்களின் தணிக்கையை ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக 09.01.2023 அன்று வெமுலபதி ஸ்ரீதர் பணியமர்த்தப்பட்டார். ஆனால், இந்த நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள பூர்வாங்க அறிக்கையில், ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்கு எந்த தொடர்பும் இல்லாமல், தானே விசாரணை நடத்தி, வெமுலபதி ஸ்ரீதர், ஆந்திர முத்திரைகள் மற்றும் பதிவுத்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

மார்கதர்சி நிறுவனத்தின் விவகாரங்கள் குறித்து எவ்வாறு சொந்தமாக விசாரணை நடத்தினார் என்பது, பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இறுதியாக ஆராயப்பட வேண்டிய விஷயம். மேலும், பூர்வாங்க அறிக்கையில் தனிப்பட்ட விவாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன" என்று தடை உத்தரவைப் படித்தார்.

முன்னதாக, மார்கதர்சி சிட் ஃபண்ட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிட் ஆடிட்டருக்கு ஒரு குறிப்பிட்ட சிட் அல்லது சிட் குழுவில் தணிக்கை நடத்த மட்டுமே உரிமை உண்டு, ஆனால் பொதுவாக நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு எதிராக தணிக்கை நடத்து உரிமை இல்லை என்று வாதிட்டார். மேலும் மார்கதர்சி சிட் ஃபண்ட்க்கு, தவறான நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கிலும், எப்படியாவது கெட்ட பெயரை உண்டாக்கித்தரவேண்டும் என்றும் முயற்சிப்பதாக மூத்த வழக்கறிஞர் ரோஹத்கி வாதிட்டார்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஒரு குறிப்பிட்ட முறையில் செய்ய வேண்டும் என்று சட்டம் கட்டளையிட்டால், அதையே அந்த முறையில் செய்ய வேண்டும், வேறு எந்த வகையிலும் செய்ய முடியாது என்றும்; மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார். எனவே, பல்வேறு புறம்பான காரணங்களால் மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தாரை துன்புறுத்துவதற்கும், மனுதாரரின் வணிகத்தைப் பாதிக்கும் வகையிலும் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்ட நடவடிக்கைகள் வழங்கப்பட்டதாக அவர் வாதிட்டார்.

மேலும், மார்கதர்சி சிட் ஃபண்ட் போன்ற நிதி நிறுவனங்களுக்கு எதிராக செய்யப்படும் பின்புலம் இல்லாத நிதி முறைகேடு தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்; இதனால் அந்நிறுவனத்தின் வணிகம் பாதிக்கப்படும் என்றும், அந்நிறுவனத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழக்கவும் வாய்ப்புகள் உண்டு எனவும் அவர் வேதனை தெரிவித்தார். 1962ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக மக்கள் மத்தியில் செயல்பட்டு வருகிறது எனவும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி எடுத்துரைத்தார்.

இந்தச் சூழலில், மார்கதர்சி சிட் ஃபண்ட்-க்கு எதிரான ஆதாரமில்லாத அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், இந்த வழக்கை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு; வலுத்த எதிர்ப்பால் முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details