தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’நோயில்லா பசியில்லா நாடாக நம் நாடு மாற வேண்டும்’ - தமிழிசை வாழ்த்து

நாளை (ஆக. 15) நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை வாழ்த்து
தமிழிசை வாழ்த்து

By

Published : Aug 14, 2021, 1:33 PM IST

நாட்டின்75ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில்,தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில், "நாளை நம் நாடு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கிறது. 75ஆவது சுதந்திர தினத்தில் நம் நாடு சுய சார்பான நாடாகவும், நாம் பயன்படுத்தும் பொருள்களை நாமே தயாரிக்கும் நாடாகவும், கரோனா காலத்தில் நம் நாட்டு தேவைகளுக்கு போக மற்ற நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் வழங்கும் வல்லரசு, நல்லரசு நாடாகவும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் முன்னேறி வருகிறது.

நம் நாடு சுய சார்பான நாடாக உருவாகியிருப்பதைப் போலவே நாம் அனைவரும் சுய முன்னேற்றம் கொண்டவர்களாக பொருளாதாரம், சுகாதார பலம் பொருந்தியவர்களாக முன்னேறுவதற்கு இந்தச் சுதந்திர தினம் வழிவகுக்கட்டும்.

அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றதைப்போல இந்தக் கரோனாவிலிருந்து விடுபடுவதற்கு நம் அனைவரின் பங்களிப்பும் தேவை. 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நம் நாடு நோயில்லாத நாடாக, பசியில்லாத நாடாக, பசுமை மிகுந்த நாடாக, வளமை மிகுந்த நாடாக அனைவருக்கும் அனைத்தும் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யும் நாடாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

புதுச்சேரி, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த 75ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:’ஆக்.14 பிரிவினை நினைவு தினம்’ - பிரதமர் மோடி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details