பெங்களூரு:ஆந்திர மாநிலம், கிரி நகர் பகுதியில் பாடி பில்டர் ஆக இருந்து 'மிஸ்டர் ஆந்திரா' பட்டம் வென்ற சையத் பாஷா என்ற இளைஞர் உட்பட 2 பேர் எளிதாகப் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டு பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவரது கூட்டாளிகளான சையத் பாஷா, ஷேக் அயூப் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். கைதான சையத் பாஷா கடப்பாவைச் சேர்ந்தவர் என்றும்; இவர், 2005 முதல் 2015 வரை குவைத் நாட்டில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரோனா காலகட்டத்தில், இவர் அந்நாட்டில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்ததும், அதுவரையில் அந்நாட்டில் இவர் தங்கக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியா வந்த இவர் உடற்பயிற்சியின் மீது ஆர்வம் கொண்டு, உடற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இவர் மிஸ்டர் ஆந்திரா பட்டத்தையும் வென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, இவர் தொடர் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்காக, சிறையில் இருந்த மற்றொரு கைதி ஒருவர் பெங்களூரு மாநகரின் கிரி நகர் மற்றும் சுப்ரமணியா நகர் உள்ளிட்டப் பகுதிகளில் மிகவும் எளிதாகத் திருடலாம் என போட்டுக்கொடுத்த திட்டப்படி, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
பின்னர், போலீசாரிடம் சிக்காமல் இருக்க மொபைல் இல்லாமல் அப்பகுதியில் சுற்றித் திரிந்த இவர் அப்பகுதியில் பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பைக்கில் சென்று தனது பராக்கிரமத்தைக் காட்டி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்பதும் இவர் மீது பல காவல் நிலையங்களில் 32 வழக்குகள் உள்ளன என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கிரி நகரில் வழிப்பறியில் ஈடுபட்டபோது, சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆபரேஷன் காவேரி - சூடானிலிருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு!