கர்நாடக மாநிலம் பெலகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால்தான் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்தது என தெரிவித்தார்.
எல்லை பாதுகாப்பா இருக்குனு மக்களுக்கு நம்பிக்கை வர காரணம் இதான் - சொல்கிறார் அமித் ஷா!
பெங்களூரு: பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதால்தான் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமித் ஷா
இதுகுறித்து மேலும் அவர், "2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், உரி, புல்வாமா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதல்களுக்கு அரசு சரியான பதிலடி அளித்தது. பாகிஸ்தான் பகுதிகளில் இரண்டு முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி அங்குள்ள பயங்கரவாதிகளை கொன்றோம். மோடி பிரதமராக உள்ளபோது, பாஜக ஆட்சியில் இந்த தாக்குதல் நடத்தியதால்தான் நாட்டின் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்தது" என்றார்.