ஹவுரா:மேற்கு வங்க மாநிலம் போபாலில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்களை மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) கைது செய்துள்ளது. முன்னதாக ஹவுராவின் பாங்க்ரா மற்றும் தெற்கு பர்கானாஸில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்தியப் பிரதேசத்தின் போபாலை சேர்ந்த 2 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. இதனிடையே உஷாரான 2 பேரும் ஹவுராவில் இருந்து போபாலுக்கு தப்பியோடினர்.