இந்தியாவுக்கு 216 கோடி டோஸ்கள் ஸ்புட்னிக் v தடுப்பூசி
16:48 May 13
இந்தியாவுக்கு அடுத்த வாரம் 216 கோடி ஸ்புட்னிக் v தடுப்பூசிகள் வரும் என சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன. தடுப்பூசி, ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 216 கோடி ஸ்புட்னிக் v தடுப்பூசி இந்தியாவுக்கு வரவிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்புட்னிக் v தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வர காலதாமதமாவதால், 216 கோடி ஸ்புட்னிக் v தடுப்பூசி இந்தியாவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.