தமிழ்நாடு

tamil nadu

'நியாமான விலையில்தான் தடுப்பூசி விற்கிறோம்' சீரம் நிறுவனம் விளக்கம்!

தனது தடுப்பூசி விலை நிர்ணய கொள்கை குறித்து சீரம் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

By

Published : Apr 24, 2021, 10:13 PM IST

Published : Apr 24, 2021, 10:13 PM IST

Serum Institute of India
Serum Institute of India

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. பயன்பாட்டில் இருக்கும் ஆஸ்ட்ராசெனெகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியைப் புனாவை சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகிக்கிறது.

நாடு முழுவதும் வரும் மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையில், தனது தடுப்பூசிகளுக்கான விலைகளை சீரம் நிறுவனம் அறிவித்தது.

மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தனது விலை குறித்து விளக்கம் ஒன்றை சீரம் நிறுவனம் அளித்துள்ளது.

தற்போதைய சந்தையில் கோவிஷீல்டு மிகவும் மலிவான விலை கொண்டது எனவும், சர்வதேச விலையுடன் இதை ஒப்பிடுவது தவறானது எனக் கூறியுள்ளது. இந்த சூழலில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நிறுவனத்திற்கு வருவாய் முக்கியம். எனவேதான் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது என விளக்கமளித்துள்ளது.

இதையும் படிங்க:கொளுத்தும் வெயிலில் 180 கி.மீ. பயணம்: கரோனா காலத்தில் கடமை தவறாத பெண் மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details