லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா நகரைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண் சலீம் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலை ஷப்னத்தின் குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால், அவர் தனது காதலருடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரை கொலை செய்தார்.
ஷப்னம் தூக்கிலிடப்படுவது எப்போது?
காதலை ஏற்க மறுத்த குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் ஷப்னத்திற்கு எப்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்பது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஷப்னம் மற்றும் அவரது காதலருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், தனது தாயை மன்னித்து அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு ஷப்னத்தின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், மதூரா நீதிமன்றத்தில் ஷப்னம் தூக்கிலிடப்படுவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் தூக்கிலிடப்படும் தேதி என்ன என்பது குறித்த விவரங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதற்காக விரைவில் சிறப்பு விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.