தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எச்சரிக்கை: தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு

தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு காய்ச்சல் பரவிவருவதாக ஒன்றிய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

dengue
dengue

By

Published : Sep 19, 2021, 4:52 PM IST

டெல்லி:இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டெங்கு காய்ச்சலின் புதிய வகையான செரோடைப்-2 தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருவகிறது.

இந்த வகை காய்ச்சல் வேகமாக பரவுவதுடன் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். உயிருக்கு ஆபத்தான காய்ச்சல் என்பதால் மாநிலங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதில் 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் 88 குழந்தைகள் அடங்கும் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதேபோல இரு தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 50 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: உ.பியில் வேகமாக பரவும் டெங்கு - 88 குழந்தைகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details