தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 19, 2021, 1:23 PM IST

ETV Bharat / bharat

உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பறிமுதல்

புதுச்சேரி: எல்லைப்பகுதியான காட்டுக்குப்பம் பகுதியில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டன.

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2.5 கோடி மதிப்பிலான 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ் பறிமுதல்
உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2.5 கோடி மதிப்பிலான 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ் பறிமுதல்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச்.19) பறக்கும்படை அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில், கிருமாம்பாக்கம் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மினி லாரியில் வந்த செட்டாப் பாக்ஸ் பெட்டிகளை பறிமுதல் செய்து அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், 30,000 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் கொண்ட 150 பெட்டிகள் இருந்தன. அவற்றுக்கான, ஆவணங்களை சரிபார்த்தபோது உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து தேர்தல் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட செட்டாப் பாக்ஸ்களின் மதிப்பு இரண்டு கோடியே 24 லட்சத்து 79 ஆயிரம் என்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவை காவல் துறையினரின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதையும் படிங்க:கடலூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

ABOUT THE AUTHOR

...view details