அகமதாபாத்:நாட்டின் நிலவு ஆய்வுத் திட்டமான சந்திரயான், சந்திரயான்-2 உள்ளிட்ட திட்டங்கள் மட்டுமின்றி, மங்கல்யான் உள்ளிட்ட திட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்து, உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட காரணமாக அமைந்தவர்களுள் ஒருவர் ஜிதேந்திர நாத் கோஸ்வாமி.
இவர், நிலவு மட்டுமின்றி, வானியற்பியல் மற்றும் சூரிய குடும்ப ஆராய்ச்சிக்கும் உலகளவில் புகழ் பெற்றவர்.
மூத்த ஆராய்ச்சியாளர் ஜிதேந்திர நாத் கோஸ்வாமி இவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது அவர், அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், இவரது உடல்நிலை குறித்து ஜிதேந்திர நாத் கோஸ்வாமிஸின் சகோதரரும் அஸ்ஸாம் சட்டப்பேரவை சபாநாயகருமான ஹிதேந்திர நாத் கோஸ்வாமி ஈடிவி பாரத்திடம் தகவல் தெரிவித்தார்.
அதில், ஆராய்ச்சியாளர் ஜிதேந்திர நாத் கோஸ்வாமியின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. தற்போது அவர் ஐசியுவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்” எனக் கூறினார்.
ஜிதேந்திர நாத் கோஸ்வாமியின் சேவையை பாராட்டி, இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: மக்களுக்காக வெளியிடப்பட்ட சந்திரயான்-2 திட்டத் தொகுப்பு