தமிழ்நாடு

tamil nadu

சிபிஎஸ்இ தேர்வு ரத்துக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுக்கு எதிராகவும், மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு எதிராகவும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

By

Published : Jun 22, 2021, 9:57 PM IST

Published : Jun 22, 2021, 9:57 PM IST

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ தேர்வு ரத்துக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி!

சிபிஎஸ்இ தேர்வு ரத்து
சிபிஎஸ்இ தேர்வு ரத்து

டெல்லி:கரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அத்துடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்குவதற்காக 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

மதிப்பெண் கணக்கீட்டு முறை

அதன்படி, 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற 40 விகித மதிப்பெண்கள், 10,11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 விகித மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் அனுமதி

அதேபோல தனித் தேர்வர்களுக்கும், தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கரோனா தாக்கம் குறைவடைந்த பிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது. இந்த மதிப்பெண் கணக்கீட்டு முறைக்குக் கடந்த 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சிபிஎஸ்இயில் பயின்ற மாணவர்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினர் பொதுத்தேர்வு ரத்து செய்யபட்டதை எதிர்த்தும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று (ஜுன் 22) நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அனைத்தும் தள்ளுபடி

அதில் நீதிபதிகள், "பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள், ஆலோசனைகளைப் பெற்று, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளது. எனவே அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இதனால், சிபிஎஸ்இ உள்ளிட்ட வாரியங்களின் மதிப்பெண் கணக்கீட்டு முறையில் எந்த குழப்பமுமில்லை" என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்துக்கு எதிராகவும், மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு எதிராகவும் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்: ஜெயபிரகாஷ் காந்தி

ABOUT THE AUTHOR

...view details