தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயர் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்: பரம்வீர் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங்கின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டுள்ளது.

By

Published : Mar 24, 2021, 1:53 PM IST

SC
SC

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் சிக்கியது. இது தொடர்பாக, மும்பை காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாஸே என்பவரை தேசிய புலனாய்வு முகமை காவலர்கள் கைது செய்துள்ளனர். இவ்விகாரத்தில் தவறாக வழி நடத்தியதாக, மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங் மீது சச்சின் வாஸே குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து அவரை ஆணையர் பதவிலிருந்து நீக்கிய மகாரஷ்டிரா அரசு, ஊர் காவல் படைக்கு மாற்றியது. இந்நடவடிக்கையை எதிர்த்தும், தன் மீதான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரியும், முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம்வீர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (மார்ச்.24) விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், இந்த விவகராத்தை ஏன் மும்பை உச்ச நீதிமன்றத்தை அணுகக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியது.

மேலும், இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல பரம்வீருக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கை நாளை விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு என்வி ரமணா பெயர் பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details