தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

#World AIDS Day: உலக எய்ட்ஸ் தினம் - மணற்சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

மணற்சிற்பம்
மணற்சிற்பம்

By

Published : Dec 1, 2021, 10:08 AM IST

புவனேஸ்வர்:உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

உலக எய்ட்ஸ் தினம் 1988ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தை போக்கும் வகையிலும், நோய் பரவாமல் தடுப்பது, நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவுவது போன்றவற்றை அறிந்து கொள்ளும் விதமாக ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இன்று (டிச.1) உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் பிரமாண்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க : 9 வயது சிறுமியின் வயிற்றில் சிசு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த மருத்துவர்கள்

ABOUT THE AUTHOR

...view details