தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை ட்வின் டவரில் ஸ்டண்ட் முயற்சி - 2 ரஷ்யர்கள் கைது!

மும்பை டிவின் டவரின் 58ஆவது மாடியில் ஸ்டண்ட் சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக பதிவு செய்ய முயன்ற இரு ரஷ்ய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ரஷ்யர்கள்
ரஷ்யர்கள்

By

Published : Dec 27, 2022, 10:43 PM IST

மகாராஷ்டிரா: மும்பை டாடியோ பகுதியில் இம்பிரியல் ட்வின் டவர் (இரட்டை கோபுரம்) கட்டடம் உள்ளது. இரட்டை கோபுர கட்டடம் 60 மாடிகளை கொண்டது. நகரின் அடையாளமாக காணப்படும், இந்த கட்டடத்தில் குடியிருப்பு, வணிகம் தொடர்புடைய அலுவலங்கள் உள்பட இயங்கி வருகின்றன.

கடந்த டிசம்பர் 26ஆம் தேதி இரவில் மர்ம நபர்கள் ட்வின் டவரில் அத்துமீறி நுழைந்துள்ளனர். கட்டடத்தின் 58-வது மாடிக்குச் சென்ற இருவரும் கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருந்து கீழே இறங்கும் ஸ்டண்ட் சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை கவனித்த ட்வின் டவர் பாதுகாவலர்கள், போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மும்பை போலீசார் ஏறத்தாழ இரண்டரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இருவரையும் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. ட்வின் டவர் கட்டடத்தில் ஸ்டண்ட் சாகசங்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக பதிவு செய்ய இருவரும் முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரோமன் ப்ரொஷின் மற்றும் மேக்சிம் ஷெர்பகோவ் என அடையாளம் காணப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து ரஷ்ய தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.

இதையும் படிங்க:சீரடி சாய்பாபாவுக்கு வைரக்கற்கள் பதித்த கிரீடம் காணிக்கை - அதன் மதிப்பு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details