ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டம் மேவாட்டின் ராம்கர் பகுதியில், குருபக்ஷா சிங் என்னும் சீக்கியரின் தலைமுடியை அடையாளம் தெரியாத நபர்கள் வலுக்கட்டாயமாக வெட்டியுள்ளனர். இதுகுறித்து குருபக்ஷா சிங் தெரிவிக்கையில், "நான் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு திரும்பிக்கொண்டிருந்தேன். இதனிடையே, நான்கு பேர் என்னை வழி மறித்து என் கண்களில் மிளகாய்ப் பொடியை வீசினார்கள்.
சீக்கியர் தலைமுடியை வலுக்கட்டாயமாக வெட்டிய கொடுமை
ராஜஸ்தான் மாநிலத்தில் சீக்கியர் ஒருவரது தலைமுடியை வலுக்கட்டாயமாக சிலர் வெட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
rajasthan-forcible-haircut-of-a-sikh-man-by-miscreants-police-begin-probe
இதையடுத்து, தலைமுடியை வெட்டியப்பின் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்களில் யாரையுமே எனக்கு அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன்" என்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆழ்வார் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் குருபக்ஷா சிங் அருகிலுள்ள குருதுவாராவில் பூசாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நேபாள எல்லையில் யுரேனியத்துடன் 15 பேர் கைது