தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மோடி உண்மை பேச மாட்டார், பேசவும் விடமாட்டார்' - ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் மோடி உண்மையை பேச மாட்டார். மற்றவர்களையும் பேசவும் விடமாட்டார். இன்னும் பொய் சொல்லி கொண்டு இருக்கிறார் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

ராகுல்காந்தி ட்விட்டர் பதிவு
ராகுல்காந்தி ட்விட்டர் பதிவு

By

Published : Apr 17, 2022, 6:22 PM IST

டெல்லி:மத்திய அரசின் அலட்சியத்தால் நாட்டிள் 40 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொதுவெளியில் வெளியிடும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கதில் பகிர்ந்த ராகுல்காந்தி, "பிரதமர் மோடி உண்மை பேச மாட்டார். மற்றவர்களையும் பேச விடமாட்டார். கரோனா காலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று, இன்னும் பொய் சொல்லி கொண்டு இருக்கிறார்.

ராகுல்காந்தி ட்விட்டர் பதிவு

நான் முன்பு கூறியதுபோல் மத்திய அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு கூறுவது போல் 5 லட்சம் கிடையாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்குங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு உண்மையான கரோனா உயிரிழப்பு புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 751 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெறுப்பு, வன்முறை நாட்டை பலவீனப்படுத்தும்- ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details