ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஃபிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தில் 58 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், விமானங்களைத் தயாரித்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு 1.1 மில்லியன் யூரோ டாலர்களை அளித்ததாக ஃபிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.