தமிழ்நாடு

tamil nadu

Puducherry:புதுச்சேரியில் புதிய வடிவ காவல் கண்காணிப்பு அறை: சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி!

Puducherry: புதுச்சேரி கடற்கரை சாலையில் கட்டப்பட்டுள்ள தொப்பி அமைப்புடைய புதிய காவல் கண்காணிப்பு அறை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

By

Published : Dec 26, 2021, 11:04 PM IST

Published : Dec 26, 2021, 11:04 PM IST

காவல் கண்காணிப்பு அறை
காவல் கண்காணிப்பு அறை

புதுச்சேரி: Puducherry: புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்கருதி முக்கியமான சுற்றுலாப் பகுதிகளான அரவிந்த ஆசிரமம், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் நிரந்தர காவல் துறை கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்க கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது நிதி ஒதுக்கப்பட்டு, அதற்காகப் பணிகள் தொடங்கப்பட்டன.

அந்தக் கட்டடம் புதுச்சேரி காவல் துறையினர் அணியும் தொப்பி அமைப்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

தற்போது இந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதுச்சேரியில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் புது வருட கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதியளித்துள்ளது.

கடற்கரையில் அதிகளவு மக்கள் கூடுவார்கள் என்ற அடிப்படையில் இந்த புதிய காவல் கண்காணிப்பு அறை ஓரிரு நாட்களில் திறக்கப்பட உள்ளது. தொப்பி அமைப்புடைய கட்டடத்தின் முன் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

இதையும் படிங்க: Thirunallar : பக்தர்கள் - யாசகர்கள் - வியாபாரிகள் - மீண்டும் பக்தர்கள்: ரிப்பீட்டு முறையில் சப்ளை ஆகும் கெட்டுப்போன உணவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details