புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு சார்பு நிறுவனமான ’பாண்லே’ தினமும் 1.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், மக்களை எளிதாகச் சென்றடையும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் வழக்கமாக மேற்கொண்டு வருகிறது.
பால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள்!
புதுச்சேரி: பால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு புதுச்சேரி அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது தமிழ்நாடு, புதுச்சேரியில் கரோனாவின் 2ஆவது அலை வேகம் எடுத்துள்ள நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான ’பாண்லே’ மூலம் கரோனா விழிப்புணர்வில் இறங்கியுள்ளது.
அந்த வகையில், அந்நிறுவன பால் பாக்கெட்டுகளில் ”கரோனா தடுப்பூசி மூலம் நம்மைக் காப்போம், நாட்டை மீட்போம்”, ”என்னுடைய முகக் கவசம் உங்களைப் பாதுகாக்கும்” உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.