புதுச்சேரி: குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது இளைய மகன் அசோக் ராஜா. இவருக்கும் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகள் சத்யாவிற்கும் புதுச்சேரி ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (மார்ச் 6) திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது மணக்கோலத்தில் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரைத் தடுக்க வேண்டும் என மணமக்கள் பதாகைகளை ஏந்தி கோரிக்கை வைத்தனர்.
வாழ்த்துகளுடன் பாராட்டு
மேலும் அதில், ''போரை நிறுத்தி அமைதியான சூழல் உருவாக வேண்டும்; போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால் போர் மனித குலத்தை முடிவுக்குக் கொண்டு வரும்; போர் இல்லாத உலகத்தை படைப்போம்; நமது வாழ்க்கை மிகவும் குறுகியது, இருக்கும்போது சந்தோசமாக இருக்க வேண்டும்" போன்ற வாசகங்கள் பதாகைகளில் இடம்பெற்றிருந்தன.
போரை நிறுத்துங்கள்: மணக்கோலத்தில் வலியுறுத்திய மணமக்கள் மணமக்கள் தங்களது கோரிக்கைகளை பதாகையாக ஏந்தியதைப் பார்த்து திருமணத்திற்கு வந்தவர்கள், தங்களது வாழ்த்துகளுடன் அவர்களுக்கு பாராட்டையும் தெரிவித்தனர்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்றும்; தங்கள் திருமணம் போல் உக்ரைனிலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்றும் மணமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மணவிழாவில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதையும் படிங்க: மீட்புப்பணிக்காக போரை நிறுத்திய ரஷ்யா