புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாகவும், புதுச்சேரியில் வளர்ச்சியை அவர் தடுத்துவருவதாகவும் கூறி அவருக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், வரும் 8ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், சட்டப்பேரவை, அரசு அலுவலகங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் போராட்டம் நடத்தக்கூடாது எனக்கூறி 144 தடை உத்தரவினை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் பிறப்பித்தார்.
முன்னதாக, போராட்டத்திற்கு அனுமதி வேண்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர், டிஜிபி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இருப்பினும், போராட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
ஆளுநர் மாளிகை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கட்டைகள் இந்நிலையில், பாதுகாப்பிற்காக புதுச்சேரி வந்துள்ள 3 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், ஆளுநர் மாளிகை முதல் அரவிந்தர் ஆசிரமம் அருகே வரை தலைமைச் செயலகம் செல்லும் சாலையில் தடுப்புக் கட்டைகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து போராட்டம்: முதலமைச்சர் நாராயணசாமி