தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பின் 7ஆவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பின் 7ஆவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

By

Published : Feb 25, 2021, 8:00 PM IST

Published : Feb 25, 2021, 8:00 PM IST

புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பின் 7ஆவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்
புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பின் 7ஆவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்

புதுச்சேரியில் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் (பிப்.25) ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், புதுச்சேரியில் எதிர்க்கட்சி உள்பட எந்தக் கட்சிகளும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதனால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, புதுச்சேரியில் 3 முறை தேர்தலுக்காகவும் 3 முறை அவசர பிரகடனமாகவும் என இதுவரை 6 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் 7ஆவது முறையாக புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் நிர்வாக ரீதியாக அனைத்து துறைகளும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கீழ் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வழங்க ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details