மொராக்கோ (ரபாத்):மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 632 பேர் உயிரிழந்ததாகவும், 329 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் வரலாற்று கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் அட்லஸ் மலை பகுதியிலுள்ள கிராமங்களிலிருந்து வரலாற்று நகரமான மராகேக் வரையிலான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. மொராக்கோ உள்துறை அமைச்சகம் இன்று காலை (செப்.9) வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி 632 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 329 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் மராகேச் பகுதியை சுற்றி உள்ள 5 மாகாணங்களில் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் இதனால் மீட்புப் படையினர் தொலைதூர சென்றடைவதற்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மொராக்கோ நிலநடுக்கத்தினால் மராகேச் நகர் முழுவதும் கட்டிடங்கள் இடிந்து பல குடும்பங்கள் ஆதரவு இல்லாமல் உள்ளனர். மேலும் ஒரு புரம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுப்பட்டுள்ளனர். நகரின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான மராகேச்சில் உள்ள 12ஆம் நூற்றாண்டின் கௌடோபியா மசூதி சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மராகேச்சில் உள்ள புகழ் பெற்ற சிவப்பு சுவர்களின் பகுதிகளும் சேதம் எற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் காரணமாக மராகேச் பகுதியில் உள்ள பல இடங்களில் மின்சாரம் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ்கள் செல்வதற்காக அல ஹவுஸ் மாகாணத்தில் உள்ள சாலைகளில் இடிந்து கிடக்கும் கட்டிடங்களை அகற்றும் பணியானது விரைந்து நடைபெறுவதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளன. மேலும் மலை கிராமங்களுக்கு இடையே அதிக தூரம் இருப்பதால் அங்கு மீட்பு படையினர் செல்ல தாமதம் ஏற்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.