கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். அதன்படி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனைத் 'துரோக தினம்' என்று காங்கிரஸ் கட்சி அனுசரித்தது. அதனோடு, 'பணமதிப்பிழப்பு நீக்க பேரழிவுக்கு எதிராக பேசுங்கள்' என்ற ஆன்லைன் பரப்புரையையும் தொடங்கி வைத்தது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியதாவது, "நான்கு ஆண்டுகளில், பண மதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்ய வேண்டும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.