தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2023, 7:52 PM IST

ETV Bharat / bharat

பிரதமர் மோடி உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம்

உத்தரப் பிரதேசத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம்
பிரதமர் மோடி உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம்

டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10ஆம் தேதி உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கிவைக்கிறார். அதன்பின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தில் 2 வந்தேபாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

உத்தரப் பிரதேச சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2.0, பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மூதலீட்டு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், சிந்தனையாளர்களுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் முதலீட்டாளர்களை மையமாகக் கொண்டு சேவையாற்றக் கூடிய சூழலை உருவாக்க இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படும்.

அதன்பின் மலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செல்லும் மோடி அங்கு சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தில் மும்பை-சோலாப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சோலாப்பூரில் உள்ள சித்தேஷ்வர், அக்கல்கோட், துல்ஜாபூர், பந்தர்பூர் மற்றும் புனே அருகே உள்ள முக்கியமான புனித தலங்களுக்கு பயணிக்க உதவும். அதோடு மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் சேவை மூலம் மகாராஷ்டிராவில் உள்ள நாசிக், திரிம்பகேஷ்வர், சாய்நகர் ஷிர்டி, ஷானி சிங்கனாபூர் போன்ற புனித தலங்களுக்கும் பயணிக்க உதவும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மோடி, சாண்டாகுரூஸ் செம்பூர் இணைப்புச் சாலை மற்றும் குரார் சுரங்கப்பாதையை நாட்டு அர்ப்பணிக்கிறார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடியின் உரை அதிருப்தி அளிக்கிறது - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details