தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி தீபோற்சவம் - முதல் முறையாக பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

அயோத்தியில் தீபாவளியையொட்டி நடைபெறும் பிரம்மாண்ட தீபோற்சவ கொண்டாட்டத்தை முதல் முறையாக பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.

PM
PM

By

Published : Oct 23, 2022, 12:24 PM IST

டெல்லி: உத்தரப் பிரதசே மாநிலம் அயோத்தியில் தீபாவளியையொட்டி பிரம்மாண்ட தீபோற்சவம் நடப்பது வழக்கம். சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, 6வது முறையாக இந்த ஆண்டும் தீபோற்சவம் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இன்று(அக்.23) மாலை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடி, இன்று மாலை 5 மணியளவில் அயோத்தியில் பகவான் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்த இருக்கிறார். பின்னர் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார்.

அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் சரயு நதிக்கரையில் நடைபெறும் பிரம்மாண்டமான ஆரத்தி நிகழ்ச்சியை பார்வையிடவுள்ளார். பிறகு பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தீபோற்சவத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 ராம்லீலா அலங்கார ஊர்திகள் மற்றும் 5 அனிமேஷன் வடிவிலான அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சரயு நதிக்கரைகளில் பிரம்மாண்டமான லேசர் காட்சிகளுடன், முப்பரிமாண ஹாலோகிராஃபிக் காட்சிகளையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

இதையும் படிங்க: நாட்டின் குடிமக்களின் சேவைக்காக நீங்கள் நியமிக்கப்படுகிறீர்கள் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details