செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மெய்நிகர் ஊடகம் மூலம் கலந்து கொண்டு சிறப்புரை சோம்நாத்:கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கிய செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 26) நிறைவுபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் ஊடகம் (Virtual Medium) மூலம் கலந்து கொண்டு உரை ஆற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, திருவள்ளுவரின் பங்களிப்பு குறித்து பேசினார்.
முக்கியமாக,
‘அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்’ என்ற திருக்குறளையும் பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார். மேலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டு மக்கள், சௌராஷ்டிர மக்களை வரவேற்று செயல்படுத்தினர் என்பதை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாளில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களின் கலாசாரம் மற்றும் மக்கள், தங்களது கலாசாரம், மதம் மற்றும் குடும்ப உறவுகளின் மூலம் இணைந்திருப்பதற்கு வாழ்த்துகள். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாநில கலாசாரம் மற்றும் குடும்ப உறவுகள் இணைந்திருப்பது பெருமிதம் அளிக்கிறது.
100 ஆண்டுகளுக்கு முன்பு, செளராஷ்டிரா மக்கள் தமிழ்நாட்டிற்குச் சென்ற நிலையில், தற்போது அவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி, இந்த செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் இணைந்துள்ளனர்” எனப் பேசினார்.
குஜராத் மாநிலத்தின் சோம்நாத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நாகாலாந்து மற்றும் ஜார்கண்ட் மாநில ஆளுநர்கள், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபலா, மீனாக்ஷி லேகி, மூத்த மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தில் கலப்படம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!