இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது. நாட்டில் இதுவரை அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில், இரண்டாம் கட்ட தடுப்பூசி விநியோகத்தின்போது பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் தடுப்பூசி போட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசி: பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுக்கு தடுப்பூசி செலுத்த வாய்ப்பு
டெல்லி: இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும்போது பிரதமர் மோடிக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும் தடுப்பூசி போட வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவிக்கும்போது,’ 50 வயதிற்கு மேற்பட்ட அரசியல்வாதிகளுக்கு அடுத்தக் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும்’ எனத் தெரிவித்தார். கரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்நிலையில், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆளும் பாஜக அமைச்சர்கள் கரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:’ சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’: மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்