நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கரோனா பெருந்தொற்று குறித்த விவகாரங்களை ஆலோசிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இக்கூட்டத்தில், அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர், சுகாதாரத் துறைச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த 24 மணி நேரத்தில், செப்டம்பர் மாதத்திலிருந்து இல்லாத அளவுக்கு 93 ஆயிரத்து 249 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 1.24 கோடியாக உயர்ந்துள்ளது.