டெல்லி: வாரணாசி பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பாரதியாரின் 100ஆவது நினைவு நாளன்று இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாரதி நினைவு நாளையொட்டி, "சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில், பாரதி நினைவு நாள் 'மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 - ஆதாரங்களை அடுக்கும் தமிழ்ப் பேராசிரியர்