தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் என்ற சவால் உருவாகியுள்ளது: பிரதமர் மோடி

மனிதனின் சுயலாப நோக்கால் பூமி பல்வேறு சவால்களை சந்திக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

Narendra Modi
Narendra Modi

By

Published : May 26, 2021, 7:26 PM IST

புத்தர் ஞானம் பெற்ற புத்த பூர்ணிமா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மத்திய கலாசாரத்துறை அமைச்சகம், சர்வதேச புத்த கூட்டமைப்பு சார்பில் உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட புத்த மதத் தலைவர்களை ஒன்றிணைத்த கூட்டம் இன்று(மே 26) நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, "கரோனாவைத் தாண்டி பல்வேறு பிரச்னைகளை மனித குலம் சந்தித்துள்ளது.

பொருளாதார ரீதியில், கரோனா பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது கரோனா குறித்து நல்ல புரிதல் உள்ளது. மனிதனின் தீவிர முயற்சியால், ஓராண்டுக்குள் தடுப்பூசி வந்தது என்ற பிரதமர் மோடி, மருத்துவர், செவிலியர், உள்ளிட்டோருக்கு நன்றி. கரோனாவைப்போல் மனிதன் சந்திக்கும் மற்றொரு சவால், பருவநிலை மாற்றம் என்ற பிரதமர் மோடி, மனிதனின் பொறுப்பற்ற சுயநலமான வாழ்க்கையே அதற்குக் காரணம்.

பருவநிலை மாற்றத்தால் ஆறுகள், காடுகள் ஆபத்தில் உள்ளது. பனிப்பாறைகள் உடைகின்றன. அத்தோடு சர்வதேச அளவில் பயங்கரவாதமும் பெரும் சவாலாக உள்ளது. மனித குலத்தின் மீது நம்பிக்கை வைத்து பயங்கரவாதத்தை முறியடிக்க புத்தரின் போதனைகள் துணை நிற்கும். உலகின் ஞானக் கடலான புத்தரிடமிருந்து நாம் சமூக பொறுப்பு, நல்வாழ்வு, கருணை ஆகியவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்" எனப் பிரதமர் உரையாற்றினார்.

இதையும் படிங்க:புத்த பூர்ணிமா நாளின் சிறப்பு என்ன?

ABOUT THE AUTHOR

...view details