பெங்களூரு: திரைப்படங்களில் அறிமுக ஹீரோக்கள் முதல் முன்னணி கதாநாயகர்கள் வரை பாம்பு தொடர்பான காமெடி காட்சிகளில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள், பாம்பை பார்த்தவுடன் பயந்து நடுங்குவார்கள்.
ஆனால் நாம் தற்போது பார்க்க போவது பாம்பை பார்த்தவுடன் பயந்து நடுங்கும் மக்கள் அல்ல. மாறாக அந்த பாம்புடனே வாழும் நாகனஹள்ளி மக்கள்.
அதுவும் ஒரு ஜீவன்தானே
இவ்வூர் கர்நாடக மாநிலத்தின் தாவனகரே மாவட்டத்திலுள்ள சன்னகிரி தாலுகாவில் அமைந்துள்ளது. இது பாம்புகளின் கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள் பாம்புகளை பார்த்து பயங்கொள்வதில்லை, அதை ஒரு பிரச்சினையாகவும் எடுத்துக்கொள்வதில்லை.
மாறாக அதையும் நம்மைப் போல் ஒரு ஜீவனாகவே பாவிக்கின்றனர். அதோடு கொஞ்சி மகிழ்கின்றனர். இங்குள்ள சிறுவர்- சிறுமிகளும் அவ்வாறே பாம்பை பார்க்கின்றனர். இதெற்கெல்லாம் இவர்கள் பாம்பை சிவன் மற்றும் ஹனுமனின் அம்சமாக பார்ப்பதே காரணம்.
பாம்புக்கு இறுதிச் சடங்கு
ஒருவேளை இந்த பாம்பு தீண்டினாலும் அதற்காக அவர்கள் மருத்துவம் பார்ப்பதில்லை. மாறாக ஆஞ்சநேயர் கோயிலில் மூன்று நாள்கள் தங்கி ஆஞ்சநேயர் தீர்த்தத்தை அருந்துகின்றனர். பாம்பு கடியும் குணமாகிவிடுகிறது என்கின்றனர்.
நாகனஹள்ளியில் நடமாடும் பாம்பு பாம்பை குடும்ப உறுப்பினர்களாக கருதும் இவர்கள், ஒருவேளை பாம்பு விபத்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ இறந்தால் கூட அதையும் மனிதருக்கு செய்வதுபோல் இறுதிச் சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்கின்றனர்.
இதையும் படிங்க: தொட்டிக்கு அடியில் குடித்தனம் நடத்திய பாம்பு!