ஹைதராபாத்: கடந்த மூன்று நாட்களாக, ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகி வருவதை பார்க்கையில் இரண்டாவது கொரோனா வைரஸின் அலை எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் புதிய தொற்றுகளை பார்க்கையில் அது பல்வேறு செய்திகளை நமக்கு தெரிவிக்கிறது. இதேபோல், கோவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு நாள்தோறும் வெளியிடும் தரவுகளின்படி, கடந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் 1000க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இருப்பினும், இந்த தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. கோவிட்-19 இறப்புகள் குறித்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் புள்ளிவிவரங்கள் பல்வேறு வினாக்களை எழுப்புகின்றன. மயானத்தில் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கைக்கும், கோவிட்-19 இறப்புகள் பற்றிய அரசாங்கங்கள் அளிக்கும் தகவல்களுக்கும் முரண்பாடு இருக்கிறது. இதன் விளைவாக, அரசாங்கம் வெளியிடும் இந்த புள்ளிவிவரங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
அறிக்கையின் அடிப்படையில், நாட்டில் கொரோனா வைரஸால் எத்தனை இறப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து கடுமையான விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு இடையே மூன்று கேள்விகளை ஈடிவி பாரத் எழுப்புகிறது. அறிக்கையின் இந்த இரண்டாவது தொடரில், ஈடிவி பாரத் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உண்மையான நிலைவரத்தை வெவ்வேறு நகரங்களில் இருந்து பெற்ற தரவுகளை இணைப்பதன் மூலம் வெளிக்கொணர முயற்சிக்கிறது. கோவிட் -19 இறப்புகள் தொடர்பான தரவு குறித்து எப்படி, ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பதை இந்த அறிக்கையின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஈடிவி பாரத்தின் முதல் அறிக்கையில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் உள்ள உண்மை கள நிலவரங்களைப் பற்றி விவாதித்தோம். இந்த மாநிலங்களில், இரண்டு மயானங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளுக்கும் அரசாங்கம் அளித்த தரவுகளுக்கும் இடையில் பொருந்தாத தன்மை இருந்தது. தற்போது இந்த அறிக்கையில், மகாராஷ்டிராவின் அகமதுநகர் மற்றும் குஜராத்தின் பாவ்நகர் ஆகிய இடங்களில் கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை குறித்து ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வோம்.
மகாராஷ்டிரா
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டில் அழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் மகாராஷ்டிராவில் மிகவும் தீவிரமாக உள்ளது. கொரோனா வைரஸின் முதல் அலையைப் போலவே, இரண்டாவது அலையும் மகாராஷ்டிராவை மிகவும் பாதித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொற்றுகளும், 398 இறப்புகளும் பதிவாகியுள்ளன. மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் புதிய கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு புள்ளிவிவரங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை இருக்கலாம், ஆனால் மாநிலத்திலும் இறப்பு எண்ணிக்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மகாராஷ்டிராவில் உள்ள அகமது நகரில் இருந்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில், இறப்பு எண்ணிக்கை குறித்த கேள்விகள் ஏன் எழுப்பப்படுகின்றன என்பதை பார்ப்போம்.
ஏப்ரல் 9 ஆம் தேதி, அகமதுநகரில் உள்ள அமர்தம் மயானத்தில் 49 பேர் தகனம் செய்யப்பட்டனர், ஆனால் ஏப்ரல் 9ம் தேதி, அகமது நகர் மாவட்டத்தில் கொரோனா காரணமாக மூன்று பேர் மட்டுமே இறந்ததாக அரசாங்கத்தின் தகவல் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 9 அன்று, மகாராஷ்டிராவில் கோவிட்-19 இறந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 301 ஆகும். மகாராஷ்டிராவின் அகமது நகரில் உள்ள ஒரு மயானத்தில் தகனம் செய்யப்பட்ட எண்ணிக்கையை மட்டுமே ஈடிவி பாரத் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
குஜராத்
குஜராத்தில் கூட, கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் வெளிவரும் கொரோனா வைரஸ் தொற்றுகள் புதிய உச்சத்தை எட்டுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், குஜராத்தில் 8,920 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, 94 பேர் இறந்துள்ளனர். இங்கேயும் இறப்பு எண்ணிக்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.