ஸ்ரீநகர்:மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த வகையில், இன்று (ஜூன் 17) விழா கலந்துகொண்டு பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா காரணமாக ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, 2022ஆம் ஆண்டில் அக்னிபாத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21லிருந்து 23ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.
'அரசின் வயது தளர்வு அறிவிப்பு இளைஞர்கள் நலன் மீதான அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தொடங்கும். இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்ட், ஜார்க்கண்ட், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டம்