லக்னோ:உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், பிகார், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பிப்ரவரி தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது.
அதன்படி, உத்தரப் பிரதேச சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும், தேர்தல் முடிவுகளும் மார்ச் 10ஆம் தேதி நடக்கிறது.
இதனிடையே, அம்மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து 58 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தொடங்குகின்றன.
ஜனவரி 21ஆம் தேதி வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாளாகும், வரும் 24ஆம் தேதியன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 27ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதையும் படிங்க: ஹேக்கிங் தாக்குதல்: உக்ரைன் அரசின் இணையதளங்கள் முடக்கம்