கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களும் போதிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
’’தடுப்பூசி பற்றாக்குறையினால் மக்களைத் திருப்பிவிட்டால் போராட்டங்கள் நடக்கும்" - ப. சிதம்பரம் டீவீட்
காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தடுப்பூசிகளின் பற்றாக்குறையை குறித்து மருத்துவமனைகளில் மக்களைத் திருப்பிவிட்டால் மேலும் போராட்டங்கள் நடக்கும் என்று ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில் ’’வருகிற மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முடிவை நான் வரவேற்கிறேன். இருப்பினும், இந்த முடிவை எடுத்ததன் மூலம் அரசு பெரிய பொறுப்பை ஏற்றுள்ளது. பின்னர், நாடு முழுவதும் தடுப்பூசியைப் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். தடுப்பூசி இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் மக்களைத் திருப்பி அனுப்பினால், அது பெரிய அதிருப்தியையும், போராட்டத்தையும் உருவாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஊரடங்கு: தமிழ்நாடு - கர்நாடக இடையே பேருந்து இயக்கம்!