டெல்லி: கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு என்பது சரியான தீர்வு இல்லை என்பதால், டெல்லியில் ஊரடங்கு விதிக்க வாய்ப்பே இல்லை என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் மிகவும் பாதிப்புக்குள்ளான மாநிலம் டெல்லி. கரோனா பாதிப்பு இரண்டாம் அலையை கடந்து தற்போது மூன்றாவது அலையின் உச்சத்தில் இருப்பதாக டெல்லி அரசு அறிவித்தது. கரோனா தொற்றால் கடும் பாதிப்புக்குள்ளான டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்று அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இதுவரை 4 லட்சத்து 95 ஆயிரத்து 598 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 42 ஆயிரத்து நான்கு பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 4 லட்சத்து 45 ஆயிரத்து 782 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 812 பேர் இறந்துள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.