நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தவில்லை, தடுப்பூசி பற்றாக்குறை, வேலையிழப்பு உள்பட பல விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
கரோனா, வேலையிழப்பு, பொருளாதாரம்... - விளாசும் ராகுல் காந்தி!
டெல்லி: கரோனா, வேலையிழப்பு, பொருளாதாரம் உள்பட பல விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தவில்லை. தடுப்பூசிகள் பற்றாக்குறை நிலவுகிறது. வேலையிழப்பு அதிகரிப்பு, விவசாயிகள், தொழிலாளர்களின் குறைகளுக்கு செவி சாய்க்கப்படவில்லை. சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பாதுகாப்பாக இல்லை. நடுத்த வர்க்கத்தினர் அதிருப்தியில் உள்ளனர்" என பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, நடிகர் அக்சய் குமாருடனான நேர்காணலில், மாம்பழம்தான் தனக்கு பிடித்தமான பழம் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதை விமர்சிக்கும் விதமாக, "உங்களுக்கு மாம்பழம் விருப்பப்பட்ட பழமாக இருப்பது சரிதான். ஆனால், சாதாரண மக்களை விட்டுவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.