நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்குமான முடிவை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று (நவ.11) வெளியிட்டது. பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள - என்டிஏ கூட்டணி பிகாரில் 125 இடங்களில் வென்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பெரும்பான்மையான சட்டப்பேரவைத் தொகுதிகளை வென்றுள்ள ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) தற்போது அடுத்த அரசை அமைப்பதில் கவனம் செலுத்திவருகிறது.
தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாத இறுதியில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பாகு சவுகானுக்கு அனுப்பலாம்.
இதனையடுத்து, பிகார் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் உரிமை கோரலாம் என தெரிகிறது.
தீபாவளிக்கு அடுத்த வாரம் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் பிகாரில் புதிய அரசு பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பிகார் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் மிக நீண்ட காலம் வீற்றிருக்கும் வரலாற்றை உறுதிசெய்யும் வகையில் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் திங்களன்றோ (நவம்பர் 16) அல்லது அதற்குப் பிறகோ பதவியேற்கலாம்.
சமதா கட்சியின் தலைவராக முதல் முறையாக மார்ச் 3, 2000 அன்று பிகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆனால், ஆட்சி நடத்த பெரும்பான்மை இல்லாததால் அவர் குறுகியக் காலத்திற்குள்ளாகவே ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
பின்னர், 2005 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதியன்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.