ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளத்தில், இன்று(ஜூன்.27) அதிகாலை இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
'ட்ரோன்' கருவி மூலம் வெடிபொருள்கள் கொண்டுவந்து, இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு விரைந்த என்.ஐ.ஏ. குழு
இந்த சம்பவம் காரணமாக, விமானப்படை தள கட்டடத்தின் மேற்கூரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசியப் புலனாய்வு முகமையைச் சேர்ந்த அலுவலர்கள் ஜம்மு விரைந்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை துணை தளபதி எச்.எஸ். அரோராவிடம் பேசினார். மேலும், ஏர் மார்ஷல் விக்ரம் சிங் சம்பவயிடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்யவுள்ளார்.
இதையும் படிங்க:'அனைவருக்கும் தடுப்பூசி... அதன்பின் மனதின் குரல்' - ராகுல் தாக்கு!