டெல்லி:இந்தியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டுவது, இளைஞர்கள் மற்றும் புது நபர்களை சேர்ப்பது போன்ற தேசத் தூரோக செயல்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்துள்ளன.
காஷ்மீர், மங்களூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சுமார் 12 பேர் சந்தேக வளையத்தில் உள்ளதாகவும், இவர்கள் என்ஐஏவின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு பெண்கள்
இதேபோன்று, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மேற்குறிப்பிட்ட மூன்று நகரங்களின் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ கடுமையான சோதனையை மேற்கொண்டு, தேச துரோக செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி ஏழு பேரை கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில், மிஷா சித்திக், செஃபா ஹரிஸ் என்ற இரண்டு பெண்களும், ஐந்து ஆண்களும் அடங்குவர். டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஹூப் போன்ற சமூக வலைதளங்களில் தேசத் துரோக கருத்துகளையும், ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான கருத்துகளையும் பரப்பியதை அடுத்து, ஏழு பேரும் கைதுசெய்யப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.