வெள்ளை மாளிகையை நோக்கி பைடன்!
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் பைடன் வெற்றிபெற்றுள்ளார். தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 264 வாக்குகள் பெற்றுள்ள பைடன் வெற்றிப்பெறவே அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்த முடிவுகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய - சீன நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை!
கல்வான் மோதலைத் தொடர்ந்து, இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே, எல்லை சச்சரவைத் தீர்க்கும் விதமாக, இருநாட்டு ராணுவப் பிரதிநிதிகளுக்குமிடையே எட்டாம்கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்கக் கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை