தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நைட் கால் பண்ணா காலையிலதான் வருவதா? ம.பி.யில் ஆம்புலன்ஸ் சிறைப்பிடிப்பு

போபால்: விதிஷாவில் இரவு நேரத்தில் போன் பண்ணி அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், மறுநாள் காலையில் காலதாமதமாக வந்துள்ளது.

By

Published : Apr 25, 2021, 10:05 AM IST

MP man h
போபால்

மத்தியப் பிரதேசம் விதிஷா மாவட்டத்தில் முகர்ஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குஷ்வாஹா. இவர் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு வெள்ளிக்கிழமை இரவு போனில் அழைத்துள்ளார்.

பலமுறை தொடர்புகொண்டும், ஆம்புலன்ஸ் 'ஆன் தி வே' என்ற பதிலே அவருக்குக் கிடைத்துள்ளது. இறுதியாக மறுநாள் காலை 9.30 மணியளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுனில், ஆம்புலன்ஸை சிறைப்பிடித்து வைத்துக்கொண்டு ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

கரோனா பாதிப்புக்குள்ளான சுனிலின் மனைவியை, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 2 மணிநேரம் ஆம்புலன்ஸ் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் தலைமைக் கண்காணிப்பாளர் (சிஎஸ்பி) விகாஸ் பாண்டே கூறுகையில், "விதிஷா மாவட்ட மருத்துவமனைக்குப் பதிலாக கியராஸ்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது மனைவியை அனுமதிக்கத்தான் சுனில் பிடிவாதமாக இருந்தார். இதனால்தான், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பிரபல துணிக்கடையில் திடீர் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

ABOUT THE AUTHOR

...view details