உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் யமுனா நதியில் குழந்தை ஒன்று கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
ஆற்றில் வீசப்பட்ட திருநங்கை குழந்தை
உத்தர பிரதேசம்: மதுரா மாவட்டத்தில் திருநங்கையாக பிறந்த குழந்தை ஒன்று யமுனா ஆற்றில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், பாத்திரத்திற்குள் போடப்பட்டு தண்ணீரில் மிதந்து வந்த குழந்தையை மீட்டு அம்மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்குக் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், 3 கிலோ அளவுள்ள அக்குழந்தை திருநங்கை என்றும், அது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில், குழந்தை திருநங்கை என்பதால் பெற்றோர் ஆற்றில் வீசியிருப்பார்கள் என தெரிவித்தனர்.