தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாம் அத்துமீறலால் மிசோரம் போக்குவரத்து தடை

அஸ்ஸா மாநிலத்துடனான எல்லைப் பிரச்சினையில் ஒன்றிய அரசு தலையிட்டு சரிசெய்ய மிசோரம் அரசு கோரிக்கை வைத்துள்ளது.

அசாமின் அத்துமீறலால் மிசோரம் போக்குவரத்து தடை
அசாமின் அத்துமீறலால் மிசோரம் போக்குவரத்து தடை

By

Published : Jul 29, 2021, 1:27 PM IST

இது குறித்து மிசோரம் மாநில தரப்பில் வெளியான குற்றஞ்சாட்டில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மிசோரம் வழியே செல்லக்கூடிய போக்குவரத்தை தடை செய்யும் வகையில் ரயில் தடங்களை அகற்றியதாகவும் தேசிய நெடுஞ்சாலையை தடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிசோரமுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினையில் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலர் லால்னுன்மாவியா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து உள்துறை செயலர் லால்பியாக்சங்கி கூறுகையில், "அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மொகமத்பூர் ரயில் நிலையம், ராம்நாத்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் தடங்களை அஸ்ஸாமை சேர்ந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் அகற்றியுள்ளனர்.

இதனால் மிசோரம் பைராபி ரயில் நிலையத்தை இணைக்கும் ஒரே ரயில் பாதை தடை செய்யப்பட்டுள்ளது " என்றார். பயணிகள், சரக்கு வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்ய எந்த மாநில அரசின் நிறுவனத்துக்கோ, பொதுமக்களுக்கோ அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், "தடைசெய்யப்பட்ட போக்குவரத்தை சரிசெய்யும் வகையில் இந்திய அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க:இமாச்சலத்தில் நிலச்சரிவு - ஏழு பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details