கொல்கத்தா: எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் நேற்று (நவ. 17) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகில் உள்ள சிடி ஸ்கேன் பிரிவில் இரவு 10:15 மணியளவில் தீ பற்றியதை ஊழியர்கள் கவனித்துள்ளனர்.
9 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
அவசர சிகிச்சை பிரிவு ஒரு மணி நேரம் மூடப்பட்டது. அதாவது இரவு 10.15 மணிக்கு மூடப்பட்டு மீண்டும் 11.20 மணிக்கு திறக்கப்பட்டது.
கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் வங்காள அமைச்சர் அருப் பிஸ்வாஸ், மாநில தலைமைச் செயலாளரும் எம்எல்ஏவுமான மதன் மித்ரா ஆகியோர் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்குச் சென்று தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்