டெல்லி:இதுகுறித்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தரவுகளில், "மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களில், இந்தாண்டு பிப்ரவரியில் மட்டும் 9.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய ஈபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது நாட்டில் மொத்தமாக சேர்க்கப்பட்ட ஈபிஎஃப்ஓ சந்தாதாரர்களில், மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கையாகும். கடந்தாண்டு பிப்ரவரியை ஒப்பிடுகையில், இந்தாண்டு 1,74,314 ஈபிஎஃப்ஓ கணக்குகள் அதிகரித்துள்ளது. அதில், 3.7 லட்சம் பேர் 22-25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பொறியியல், வாகன உற்பத்தி, கட்டுமானத் துறைகள்
இந்த ஈபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் உயர்வை தொழில் வாரியாக எடுத்துக்கொண்டால், பொறியியல், ஆட்டோமொபைல், கட்டுமானம் சார்ந்த தொழில் துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இது பிப்ரவரியின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 47 விழுக்காடாகும்.
வேலை வாய்ப்புகளில் பெண்கள்
இதனை பாலின வாரியாக பகுப்பாய்வு செய்தால், பிப்ரவரி மாதம் கூடுதலாக 3.10 லட்சம் பெண் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது ஜனவரி மாத எண்ணிக்கையை விட அதிகம். குறிப்பாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வேலைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பெண்களின் பங்கு பல்வேறு துறைகளில் தேவைப்படுவதை காட்டுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவிலேயே முதன்முறையாக சமவாய்ப்பு கொள்கை.. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பு