தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீட், எய்ம்ஸ்: மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவைத்த மா.சு.!

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள், நீட் தேர்விற்கு விலக்கு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

By

Published : Sep 3, 2021, 7:13 PM IST

Updated : Sep 3, 2021, 7:40 PM IST

டெல்லியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை மா. சுப்பிரமணியன் இன்று (செப்டம்பர் 3) நேரில் சந்தித்து கோரிக்கைவைத்தார். அதன்படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள், நீட் தேர்விற்கு விலக்கு, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அப்போது மா. சுப்பிரமணியனுடன் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.

ஒன்றிய அமைச்சருடன் மா.சு சந்திப்பு

இது தொடர்பாக மா. சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மாநிலத்தின் மருத்துவத் தேவைகள் சம்பந்தமாக சற்றுமுன் டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்தோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவைத்த மா.சு

இதையும் படிங்க:ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: செப். 17இல் முக்கிய உத்தரவு

Last Updated : Sep 3, 2021, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details